இலங்கையில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் அரசாங்க ஊழியர்கள்
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து சம்பள அதிகரிப்பு மற்றும் 20,000 ரூபா கொடுப்பனவைக் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க போராட்டம்
2016ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்புக்குப் பின்னர் ஏழு வருடங்களாக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கான ஆரம்பப் புள்ளியாக கடந்த வியாழன் முதல் துறைமுகம், புகையிரத, மீனவர், தாதியர், ஆசிரியர் சங்கங்கள் தமது பணியிடங்களில் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வைக் கோரி எதிர்ப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
