சிக்ஸர் மழை பொழிந்த ஐபிஎல் ஆட்டம்: இறுதிப்பந்தில் சன்ரைசஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா
ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டியான கொல்கத்தா மற்றும் - சன்ரைசஸ் அணிகளுக்கிடையிலான சட்டமானது பெரும் சவால் மிக்க போட்டியாக அமைந்திருந்தது.
இறுதிப்பந்து வரை பரபரப்பை ஏற்படுத்திய குறித்த போட்டியானது கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நிறைவடைந்திருந்தது.
கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிகொண்டது.
அண்ட்ரே ரசலின் அதிரடி ஆட்டமானது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும் பங்கை வகித்திருந்தது.
200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி
மேலும், ஹர்ஷித் ரானா தனது இறுதி ஓவரில் பெற்ற இரண்டு விக்கட்டுக்களும் ஆட்டத்தை கொல்கத்தா அணி பக்கமாக திருப்புவதற்கு வழிவகுத்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.
17ஆவது ஐபிஎல் தொடரில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றுக்கொண்டது.
எவ்வாறாயினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சுனில் நரேன் (2), வெங்டேஷ் ஐயர் (7), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (0), நிட்டிஷ் ரானா (9) ஆகிய நால்வரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்திருந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் 12.3 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 157 ஓட்டங்கள் வரை உயர்த்தினார்.
ஆரம்ப வீரர் பில் சோல்ட் 54 ஓட்டஙக்ளைப் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் ராமன்தீப் சிங்குடன் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ராமன்தீப் சிங் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைப்பாட்டமாகிய ரிக்கு சிங், அண்ட்ரே ரசல் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.
அண்ட்ரே ரசல்
ரிக்கு சிங் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் அண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் அடங்கலாக 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மயன்க் மார்கண்டே 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்வரசை வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அந்த எண்ணிக்கை வெற்றியிலக்கை அடைவதற்கு வழிவகுக்கவில்லை.
மயன்க் அகர்வால் (32), அபிஷேக் ஷர்மா (32) ஆகிய இருவரும் 33 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதோடு எய்டன் மார்க்ராம் (18), ராகுல் த்ரிபதி (20), அப்துல் சமாத் (15) ஆகியோர் ஆட்டமிதந்தனர்.
எனினும் ஹென்றிச் க்ளாசென், ஷாபாஸ் சமாத் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 203 ஓட்டங்களாக உயர்த்தினர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய க்ளாசன்
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 60 ஓட்டங்கள் தேவைப்பட்டது. வருண் சக்கரவர்த்தி வீசிய 18ஆவது ஓவரில் 21 ஓட்டங்கள் விளாசப்பட்டதுடன் மிச்செல் ஸ்டாக் வீசிய 19ஆவது ஓவரில் 26 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ரானா வீசிய கடைசி ஓவரின் முதலாவது பந்தில் க்ளாசன் ஆறு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க அடுத்த பந்தில் அவரால் ஒரு ஓட்டத்தையே அவரால் பெற முடிந்தது.
Harshit Rana's remarkable last over seals the deal for #KKR who start their #TATAIPL campaign with narrow victory ?
— IndianPremierLeague (@IPL) March 23, 2024
Scorecard ▶️ https://t.co/xjNjyPa8V4 #KKRvSRH pic.twitter.com/WKKVha9adx
அடுத்த பந்தில் ஷாபாஸ் அஹ்மதை ஆட்டம் இழக்கச் செய்த ஹர்ஷித் ரானா, 5ஆவது பந்தில் க்ளாசனையும் ஆட்டமிழக்க செய்தார்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஹென்றிச் க்ளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டார். கடைசிப் பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபத்தின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட ஹர்ஷித் ரானா வீசிய பந்தானது கொல்கத்தாவின் வெற்றியை நிர்ணயித்தது.
பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அண்ட்ரே ரசல் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |