லங்காசிறி, தமிழ்வின் ஊடக அனுசரணையில் கொழும்பில் மாபெரும் மலிவு விற்பனை!
2021 வருடம் முடிவடையும் நிலையில், கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மாபெரும் மலிவு விலையில் விற்பனை இடம்பெறுகின்றது.
நேற்று முதல் மலிவு விற்பனை ஆரம்பமாகியுள்ளன. இலங்கையில் பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆடை, அலங்காரப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மலிவு விற்பனையானது இன்றும், நாளையும் காலை முதல் மாலை வரையில் இடம்பெறவுள்ளது. இந்த மலிவு விற்பனையில் பங்கேற்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்விற்கு லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ககன ஆகிய ஊடகங்கள் அனுசரணை வழங்கியுள்ளன.


