கடவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு வருமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடவுச்சீட்டுகள்
இலங்கையில் போதுமான கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், நவீனமயமாக்கப்பட்டு, வித்தியாசமான முறையில் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் வெளிப்புற அட்டை நீல நிறத்தில் உள்ளது. முன்பு சிவப்பு நிறமாக இருந்தது.
பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்கள் இருந்த நிலையில், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் மட்டுமே உள்ளன.
கடவுச்சீட்டில் சிறம்பம்சம்
பழைய கடவுச்சீட்டில் N என்ற எழுத்தும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் P என்ற எழுத்தும் காணப்படுகின்றது.
கடவுச்சீட்டின் ஒவ்வொரு பக்கமும் இலங்கையின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டும் வண்ணம் வரையப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
