ஜனாதிபதிக்கு அதிர்ச்சி தகவல் அனுப்பிய வெங்காய விவசாயிகள்
வெங்காயச் செய்கையில் இருந்து முற்றாக விலக உள்ளதாக உள்ளூர் பெரிய வெங்காய செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது உற்பத்திகளை அறுவடையும் செய்யும் தருணத்தில், நாட்டு மக்களின் பாவனைக்கு பற்றாக்குறையாக இருக்கும் பெரிய வெங்காயம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இவ்வாறு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக தமது அறுவடை பாதிக்கப்படுவதுடன் உரிய விலை கிடைக்காததால் வெங்காயச் செய்கையில் இருந்து முற்றாக விலக உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றனர்.
ஜனாதிபதிக்கு மறைமுக எச்சரிக்கை
மாத்தளை மற்றும் தம்புள்ளை பகுதிகளில் 2000 ஏக்கரில் பெரிய வெங்காயம் செய்கை பண்ணப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதிகளில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் களஞ்சியசாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்திய வெங்காயம் ஒரு கிலோ 95-100 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதே விலைக்கு எங்களின் உற்பத்திகளையும் கொள்வனவு செய்ய முயல்கின்றனர். எமது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. வேலையாட்கள், பசளை, அறுவடை என அதிக பணம் வழங்க வேண்டியுள்ளது. அவ்வாறு என்றால் எங்கள் உற்பத்தி செலவு குறைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சில விவசாயிகள்,
ஜனாதிபதி அநுர ஐயா கோட்டாபய ராஜபக்சவும் விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததாலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்டார். நீங்களும் ஞாபகம் கொள்ளவும்.

நாங்கள் ஆர்வமாக அமைத்துக் கொண்ட அரசாங்கம் எமக்கு நிவாரணம் தர மறுக்கிறது. விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கடந்த காலங்களில் எம்முடன் ஒன்றாக படுத்துறங்கி, சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளுடன் இணைந்து கசிப்பும் குடித்துள்ளார். இப்போது எமது பிரச்சினையை அவர் பேசுவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri