பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government
By Dhushi Aug 31, 2026 04:00 PM GMT
Report

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (31.08.2026) இடம்பெற்றுள்ளது.

வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்  அருட்தந்தை இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வராகவும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாகவும் சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய இம்மானுவேல்

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து இங்கிலாந்து சென்ற அவர், அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் ஜெர்மனிக்குச் சென்று, மூன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு வரை குருவாகப் பணியாற்றினார்.

அங்கு பணியாற்றிய காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.

ஈழ விடுதலைப் போராட்டம்

இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராக அருட்தந்தை இம்மானுவேல் தெரிவுசெய்யப்பட்டார்.

பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன் | Bhaskaran Kandiah Meets Former Priest In Person

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தமிழீழ தேசியத் தலைமையின் நிலைப்பாட்டுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேலை, தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.   

பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன் | Bhaskaran Kandiah Meets Former Priest In Person  

பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன் | Bhaskaran Kandiah Meets Former Priest In Person

பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன் | Bhaskaran Kandiah Meets Former Priest In Person

பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன் | Bhaskaran Kandiah Meets Former Priest In Person

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான தகவல்

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US