சேவை செய்யாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: கண்டி மக்களிடம் பாரத் கோரிக்கை
மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்யாதவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
கண்டி நகரில் இன்று (18.10.2024) அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்றம் அனுப்பும் முடிவு
“எம்மைபோன்ற இளைஞர்களை, மக்கள் பக்கம் நிற்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பும் முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.
நீண்டகாலமாக கண்டியில் தமிழ்ப் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அதனை வென்றெடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 2010 ஆம் ஆண்டு விதை விதைத்தார்.
அந்த விதைமூலம் ஏற்பட்ட விளைச்சலைதான் சிலர் 2015 ஆம் ஆண்டு அறுவடை செய்தனர். எனினும், கண்டி மாவட்ட தமிழ்ப் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடக்கவில்லை’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |