"தமிழர்கள் அவசரப்படாமல் ஒதுங்கி நிற்பது சாலச்சிறந்தது"

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka
By Dhayani May 02, 2022 11:49 PM GMT
Report

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடக்கு,கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விதமான நெருக்கு வாரங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நெருக்கடிகளுக்கு தீர்வு காண அந்தந்த கால தலைவர்கள் பல்வேறு விதமான அரசியல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இறுதியாக பிரபா ரணில், ஒப்பந்தம் என்று கிழித்தெறியப்பட்ட அனைத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனாலும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிட்டியது என்று பார்த்தால் அது கேள்விக்குறியே? இதிலிருந்து தமிழர் தரப்பு ஒரு முக்கியமான விடயத்தை அரசியல் ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது இந்நாட்டில் ஆட்சிப் இடம்பெறுகின்ற எந்த ஒரு சிங்களத் தரப்பும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஒருகாலமும் நிரந்தரமான ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வினை தரப்போவதில்லை என்பது தான் யதார்த்த நிலை.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து பார்க்கின்ற பொழுது இப்போதுள்ள அரசியல் நெருக்கடியை மக்கள் பிரச்சினையோடு முடிச்சுப் போட்டு பார்ப்பதில் எனக்கு உடன்பாடு குறைவாகவே இருக்கிறது.

காரணம் எந்த ஒரு அரசியல் நெருக்கடியிலும் மக்கள் பிரச்சினையை சம்பந்தப்படுத்தி பார்க்கின்ற பொழுது அது எதிர்காலத்தில் தமிழர் தரப்புக்கு சிக்கலை உண்டு பண்ணாத விதத்தில் அமையப் பெறுமா என்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல் செய்வதில் எப்போதும் சார்ந்து நிற்கின்ற தமிழர் அரசியல் புலம் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு என்ன விதமான முடிவினை சார்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொள்வது என்பதில் ஐயம் தெளிவற்ற ஒரு முடிவை அவர்கள் அணுக முனைவது வெளிப்படையானது.

சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி நகர்கின்ற அரசியல் முடிவில் தமிழர் அரசியல் கட்சிகள் தன்னை இணைத்துக்கொள்வது ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிந்தால் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்திற்கும் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதியிடம் தமிழர் பிரச்சினையை முடிவுக்குகொண்டு வருவதற்காக என்ன விதமான பேச்சுவார்த்தையை நாம் முன்னெடுக்க முடியும்.அவர்களை எந்த அடிப்படையில் நாம் அணுகமுடியும். இப்போது எடுக்கின்ற முடிவுகள் நமது எண்ணங்களுக்கு மாற்றாக அமைந்துவிடுகின்றது.

தமிழர் தரப்பு மூன்று வருடகாலமும் அல்லது அடுத்து ஒரு அரசியல் தலைமை அமைகின்றவரைக்கும் மௌனம் காப்பது எந்தவகையில் பொருத்தமா கஅமையும் என்பதை நாம் மனதில் நிறுத்தி கேள்விகேட்டுக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொருத்தவரைக்கும் இப்போதுள்ளஅரசியல் நெருக்கடி என்பது தமிழர் தரப்புக்கு எவ்விதத்திலும் சாதகத்தையோ,பாதகத்தையோ உடனடியாகத் தந்துவிடப் போவதில்லை.

எனவே இச்சூழ்நிலையில் தமிழ் தரப்பு மக்கள் சார்ந்தும் அல்லாமல் அரசியல் சார்ந்து அல்லாமல் அமைதியாக இருப்பதே உசிதமானது.ஏனெனில் இப்போது மக்கள் எதிர்கொள்கின்ற வாழ்வியல் பிரச்சினைகள் சார்பான எந்த ஒரு நெருக்கடிக்கும் எடுக்கப்படுகின்ற தீர்வு என்பது அரசியலை மையப்படுத்தியே முன்வைக்கப்படும் அபாயம் தெரிகின்றது.

நாம் அமைதியாக இருக்கின்றபோதும் சரி அல்லது ஏதாவது ஒருபக்கம் சார்ந்து முன்வைக்கப்படும் தீர்வுக்குப் பின்னால் பயணிக்க தொடங்கினாலும் சரி இந்த பிரச்சினைகள் ஏதோ ஒரு விதத்தில் முடிவுக்குவரத்தான் போகின்றது. அது நிச்சயமாக பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வை மையப்படுத்தியதாகவே அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

கடந்த காலத்தில் இதனை விட மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தமிழர் வாழ்க்கை பலாத்காரமாக தூக்கி எறியப்பட்ட போது அதனை நாம் மிகவும் பொறுமையுடன் கடந்து வந்திருக்கிறோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நின்று இப்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வது தமிழருக்கு மிகவும் கஷ்டமான விடயம் அல்ல.

எனவே இப்போதுள்ள அரசியல் நெருக்கடியை தோற்றுவித்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மயப்படுத்திய இந்த இழுபறியில் நாம் சிக்கிக்கொள்ள தேவை இல்லை என்பது தான் இப்போதைக்கு சரியான நிலைப்பாடாக இருக்கும்.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் உணர்வு நிலைப்பட்ட அரசியல் செயற்பாடுகள் விழுந்துவிடாமல் மிகவும் கவனமாக நிதானித்து பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த விடயத்தையும் கவனத்தில் கொண்டு மக்கள் சார்ந்து முடிவுகளை எட்டவேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. அரசியல் ரீதியில் முடிவுகளை நோக்கி நாம் நகர்கின்றபோது எமது நிலைப்பாடுகளை தமிழர் இருப்புக்கு அச்சுறுத்தல் வராத வகையில் எடுக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது.

எனவே இந்த அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பு பின்னிப்பிணைந்து எதிர்கொள்வதை விட அமைதியாக ஒதுங்கிநின்று கடந்துபோவதே சாலச்சிறந்தது.அதுவே நமது நிலைப்பாடாக அமையும். பொழுது ஏதாவது ஒருதீர்வு காணும் நிலையில் நாம் எந்த ஒரு தரப்பிலும் கேள்விக்குட்படுத்த முடியாத ஒருநிலையில் இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US