யுகதனவி உடன்படிக்கை நாட்டை காட்டிக்கொடுத்த சம்பவம்:சந்திம வீரக்கொடி
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சம்பந்தமான உடன்படிக்கை நாட்டை காட்டிக்கொடுத்த சம்பவமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody ) குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட இடமளித்த அமைச்சரவையில் உள்ள அனைவரும், நாட்டின் எதிர்காலத்தை காட்டிக்கொடுத்தமைக்கான குற்றவாளிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது சம்பந்தமான சர்ச்சைக்குரிய உடன்படிக்கை தொடர்பான ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே வீரக்கொடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தேசத்தை காட்டிக்கொடுத்தமையாகும். சட்டமா அதிபர் அறியாமல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை மறைத்து வைத்திருக்க முடியாது.
இந்த தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டிருந்தால், அவர்களும் இந்த காட்டிக்கொடுப்பின் பங்காளிகள் எனவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri