வடக்கு மாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மாகாணத்தின் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தலைமையில் இன்று (12.12.2024) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்து கொண்டார்.
இதன்போது, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
வெளியிடப்பட்ட இதழ்
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சிற்கு கீழுள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள், யாழ். பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன், விவசாயிகள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அறுவடை இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தேவநாதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
