புடினிற்கு அடுத்த பேரிடி! நெருங்கிய ஆதரவாளர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே ஒரு ஆதரவாளராக இருந்த பெலாரஸ் ஜனாதிபதி மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ (68 வயது) மே 9ம் திகதி மாஸ்கோவில் வெற்றிவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், திடீரென்று நோயாளர் காவு வண்டி மூலமாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நடக்க முடியாத நிலை
மாஸ்கோவில் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், வாகனம் ஏற்பாடு செய்ய தமது நண்பரான புடினிடன் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுகாஷென்கோ, தற்போது மருத்துவ ரீதியான கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
ஆனால், அவர் இறந்திருக்கலாம் என முன்னாள் சோவிய ஒன்றிய மூத்த பத்திர்கையாளர் ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய லுகாஷென்கோ நிலை அறிந்து விளாடிமிர் புடின் அதிர்ச்சியடைந்ததாகவும், உடனையே அவரை தொடர்புகொள்ள புடின் முயற்சித்ததாகவும், ஆனால் அந்த நிலையில் லுகாஷென்கோவால் அழைப்பை ஏற்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
திடீரென்று நோய்வாய்ப்பட காரணம்
மேலும் லுகாஷென்கோ திடீரென்று நோய்வாய்ப்பட காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை பெலாரஸ் நாட்டில் நடந்த வெற்றிவிழாவிலும் அவர் உரையாற்றவில்லை என்பதுடன், 2022ல் நடந்த வெற்றிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளையே ஊடகங்கள் ஒளிபரப்பியதாக கூறுகின்றனர்.
லுகாஷென்கோ நிலை குறித்த பெலாரஸ் ஜனாதிபதி மாளிகை இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.
ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாக மட்டும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |