காசாவை போல பெய்ரூட் புறநகர் பேரழிவை சந்திக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள், காசா முனையைப் போன்றே கடுமையான அழிவைச் சந்திக்கும் என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் வசிக்கும் இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
நகரம் போல மாறும்
"மிக விரைவில் தஹியே (Dahiyeh) பகுதி, கான் யூனிஸ் (Khan Younis) நகரம் போல மாறும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் கான் யூனிஸ் நகரம் இஸ்ரேலிய தாக்குதல்களால் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதை அவர் இங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வெளியிட்ட வீடியோ அறிக்கையில், ஹெஸ்புல்லா அமைப்பு மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்காக அவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் கவலை
"ஈரானில் உள்ள ஒக்டோபஸின் தலையை நாங்கள் தாக்கி வருகிறோம், அதே நேரத்தில் ஹெஸ்புல்லா எனும் அதன் கரங்களையும் துண்டிப்போம்" என்று அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், அமைச்சரின் இந்த வெளிப்படையான எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri