பௌத்த தேரர்களின் போதைப்பொருள் கடத்தலுக்கான பின்னணியில் மாற்றுமத வர்த்தகரா..!
தாய்லாந்தில் இருந்து பெரும் தொகைப் போதைப்பொருளைக் கடத்தி வந்த பௌத்த தேரர்களின் பின்னணியில் மாற்றுமத வர்த்தகர் ஒருவர் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சுமார் 110 கிலோ கிராம் எடை கொண்ட குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை தாய்லாந்தில் இருந்து விமானம் மூலமாக கடத்திவர முற்பட்ட 22 இளம் பௌத்த பிக்குமார் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பௌத்த பிக்குமாரின் தாய்லாந்துப் பயணம்
குறித்த பௌத்த பிக்குமாரின் தாய்லாந்துப் பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான செலவினங்களை காலிப் பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுமத வர்த்தகர் ஒருவரே வழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தற்போது தெரியவந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ள அமிதானந்த தேரர் உள்ளிட்ட முக்கிய சந்தேக நபர்களின் வழக்குச் செலவுகளையும் குறித்த வர்த்தகர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வர்த்தகரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 28 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.