குடியிருப்பாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, பொலிஸ் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் ஊடாக பொலிஸார் இந்த நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது
பிரிவிற்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை) என அந்த படிவத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
