நாட்டிற்கு ஏற்பட்டிருப்பது மிகவும் கஷ்டமான மற்றும் துயரமான பயணத்தின் ஆரம்பம் மட்டுமே-இந்திரஜித் குமாரசுவாமி
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருப்பது மிகவும் கஷ்டமான மற்றும் துன்பகரமான பயணத்தின் ஆரம்பம் மாத்திரமே என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடுமையான செலவு கட்டுப்பாட்டின் மூலம் கீழ்மட்டத்தின் ஒரு சமநிலையை நாடு நெருங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி வீதம் 8 முதல் 9 வீதமாக குறையும்
2022 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 வீதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியானது 2025 அல்லது 2026 வரை கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்த மட்டத்திற்கு செல்லாது என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு இதுவரை அரச செலவினங்களில் சிறந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்த அதிகாரிகளால் முடிந்துள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக செலவுகள் மற்றும் முதலீட்டு செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தற்போது பொருளாதார வீழ்ச்சி மட்டத்தை சமூக மற்றும் அரசியல் விளைவுகளுக்கு தடையேற்படுத்தாமல் மிக நீண்டகாலத்திற்கு முன்னெடுத்து செய்ய முடியாது.
பலன்களை அதிகரிக்கக்கூடிய மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட உயர் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க தேவையான பொருளாதார மாற்றங்களை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற இதுவரை இலங்கைக்கு முடியாமல் போயுள்ளது.
இதுவரை செய்ய முடியாமல் போன ஒன்றை செய்ய வேண்டும்
தற்போது நாடு செய்ய முடியாமல் போன ஒன்றை செய்ய வேண்டியுள்ளது.
நிந்தர வளர்ச்சி மற்றும் உயர் பெறுமதியை கொண்ட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தி, தொலை நோக்கு கொண்ட பொருளாதார கொள்கையுடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் எனவும் இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.