மதுபான விற்பனை 30 வீதமாக வீழ்ச்சி
நாட்டில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டு மக்களின் வருமானம் குறைந்துள்ளமை என்பன காரணமாக சந்தையில் மதுபானங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதுடன் விற்பனை 30 வீதமாக குறைந்துள்ளது என அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தெரியவந்துள்ளது.
மதுவரி திணைக்களத்தின் வருமான இலக்கை அடைவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மதுபான உற்பத்திக்கு தேவையான எதனோல் குறைந்துள்ளமை, டீசல் மற்றும் கழிவு எண்ணெய் தட்டுப்பாடு, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்பன இதற்கான காரணங்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சட்டரீதியான மதுபானத்திற்கான கேள்வி குறைந்துள்ளதன் காரணமாக சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துக்கொண்டுள்ளார்.
வரி அறவீட்டு கொள்கைகளை மாற்றும் போது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விதம், வரி நிர்வாகத்தை முன்னேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
