சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் : பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு
இந்தியாவிலிருந்து (India) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் (Puttalam) பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பீடி இலைகளை புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (30.04.2024) குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடல்மார்க்கம்
இதன்போது சுமார் 39 உரைகளில் 1230 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்று பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாமென்று பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
