யாழில் வீதிகளில் வீசப்படும் கழிவுகள்:மக்கள் விசனம்(Photos)
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும்,கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் சிலர் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால், ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களில் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்கள் விசனம்
இந்நிலையில் தற்போது சிலர் அந்த ஒழுங்கைக்குள் கழிவுகளை கொட்டுவதனால், பலத்த இன்னல்களை அப்பகுதிகளில் வசிப்போர் எதிர்நோக்கியுள்ளனர்.
வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவதனாலும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
இது தொடர்பில் மாநகர சபை உள்ளிட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும், உரிய
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
