திருமண நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்தால் கடும் மோதல் - நால்வர் படுகாயம்
பலங்கொடயில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்து பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிரிஸ்வத்தை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில் உணவு சரியில்லை என கூறியமையினால் இந்த மோதல் எற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருமண நிகழ்வில் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கொழும்பை சேர்ந்தவர்கள் திரும்பி செல்லும் போது, அதில் ஒருவர் திருமணத்தில் உணவு மிகவும் மோசமாக இருந்ததென உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உணவு ஏற்பாடு செய்தவருடன் மோதலின் ஈடுபட்ட உறவினர்கள் இறுதியில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri