இந்துக்களின் சமரில் அபார வெற்றியை பதிவு செய்தது யாழ். இந்து கல்லூரி
இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். இந்து கல்லூரிக்கும், கொழும்பு இந்து கல்லூரிக்குமான போட்டியில், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை நேற்று ஆரம்பமான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 80 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
13ஆவது இந்துக்களின் சமரின் இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமர் 3 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் சமநிலை அடைந்துள்ளது.
2ஆவது இன்னிங்ஸ்
பம்பலப்பிட்டி இந்து அணியின் 2ஆவது இன்னிங்ஸில் ராமராஜ் டிலோஜன் மாத்திரம் துடுப்பெடுத்தாடி இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ். இந்து 8 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.
முதல் இன்னிங்ஸில் 160 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பம்பலப்பட்டி இந்து 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளது.
முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் பரிசித் 46 ஓட்டங்களையும் பிரேமிகன் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam