மட்டக்களப்பு - திக்கோடை கிராம மக்கள் பிரச்சினைக்கு தீர்வு: அரச முக்கியஸ்தர்கள் உறுதி(Photos)
மட்டக்களப்பு - போரதீவுப் பற்று பிரதேசத்தின் வெல்லாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள திக்கோடைக் கிராமத்தின் சில பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பட்டமானது நேற்றையதினம் (15.06.2023) இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது அப்பிரதேசத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்றுள்ளனர்.
அவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழந்து கொண்டு மகஜர்களை கையளித்துள்ளதுடன், தமது கிராமத்தில் எழுந்துள்ள பிரச்சனைக்கு உடன் தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஆர்பாட்டக்கார்ளை அவ்விடத்திலேயே சாந்தப்படுத்திய இராஜங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அவதானமாகக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்களை உடன் அழைத்து தற்போது நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடிதுடன் தீர்வு பெற்றுத் தருவாதாக உறுதியளித்து, முதல் விடையமாக அந்த மக்களின் கோரிக்கைகள் பிரஸ்தாபிக்கப்பட்டு, ஆரயப்பட்டுள்ளன.
உரிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படல்
அத்துடன், திக்கோடை கிராமத்திலுள்ள 8ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களின் வேண்டுகோளிற்கிணங்க அக்கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை உர உற்பத்திக்கு வழங்கப்பட்ட காணிக்குப் பதிலாக வேறு ஒரு காணியை வழங்குதல், அக்கிராமத்தில் அரச காணியை வெளி நபர் ஒருவர் ஆக்கிரமிப்புச் செய்வதைத் தடுத்தல்.
அயல் கிராமமான வம்மியடியூற்றுக் கிராமத்திற்கும், திக்கோடைக் கிராமத்திற்கும் இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனைக்கு அயல் கிராம மக்களை வீண் பிரச்சினைகளுக்கு உட்படுத்தாமல் சுமூமகமாகத்தீர்வு காணுதல்,போன்ற தீர்மானங்களை அக்கூட்டத்தினபோது முன்னிலையில் எடுக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கைக்கு அந்த இடத்திலேயே தீர்வு பெற்றுத்தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இதன்போது கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்களான திக்கோடைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



