கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிட்டியே சுமன தேரர் தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன.
எனினும், அங்கு பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்துவதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த போராட்டத்தில் தும்புத்தடிகளோடு, அம்பிட்டிய சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் களமிறங்கியுள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டவர்களை, அம்பிட்டிய சுமன தேரர் கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டி கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்.
இரண்டாம் இணைப்பு
மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.
இன்றைய தினம் ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் மற்றும் தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.
இதேவேளை, அம்பிட்டிய சுமன தேரர் கையில் தும்புத்துடிகளை வைத்து கொண்டு வீதியோரத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், அம்பிட்டிய சுமன தேரருடன் இணைந்து பெரும்பான்மை இன மக்கள் சிலரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
