மட்டக்களப்பில் 24மணிநேரமும் செயற்படவுள்ள அனர்த்த முகாமைத்துவ பிரிவு: வியாழேந்திரன் உறுதி
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம் 24மணிநேரமும் தயார் நிலையில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயும் கூட்டம் இன்று(02.01.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதிக்கப்படும் பிரதேசத்தில் உள்ள மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் மாவட்ட செயலகத்தில் விசேட பிரிவொன்று 24மணிநேரமும் இயங்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பில் வெள்ள அனர்த்ததினால் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்கள் இரண்டு பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் குடும்ப உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்" என கூறியுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் நிலைமைகள் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்குதல் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார்,உத்தியோகத்தர் சத்தியசயந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரொஸ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
