இலஞ்ச ஊழல் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
மட்டக்களப்பில் அரச திணைக்களம் மற்றும் பாடசாலைகளில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்குவற்கான தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக துண்டுபிரசுரம் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
துண்டுபிரசுரங்களை மக்கள் பார்வைக்காக அரச காரியாலயங்களில் ஓட்டும் நடவடிக்கை இன்று(03.10.2023) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த (26.09.2023)ஆம் திகதி மட்டு சன்சயன் உணவகத்தில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பான கலந்துரையாடலில் ஊழல் தகவல்களை பொதுமக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களை அரச காரியாலயங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவற்கான துண்டுபிரசுரம் ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஒப்பந்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் 1994 ம் ஆண்டு 19 பிரிவின் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும்.
எனவே அரச அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் இலஞ்சம் பெறும் அரச உத்தியோகத்தர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே இலஞ்ச ஊழல் தொடர்பான தகவல்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இல 38 மலசேகர மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரிக்கே அல்லது 0112586257, 0112584872, 0112586851, 0112596360 என்ற தொலைபேசி இலக்கம் ஊடகவே அல்லது 0112595045 என்ற தொலைநகல் ஊடாக தகவல்களை வழங்குமாறு துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
