மட்டக்களப்பில் நீர் இன்றி தவிக்கும் மக்கள்!.. வேடிக்கை பார்க்கும் அரசியல் வாதிகள்
மட்டக்களப்பு - இலுப்பையடிச்சேனை மக்கள், குடிநீர் மற்றும் பாவனைக்கான நீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும் அரசியல் வாதிகள் இதற்கான எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.
லங்காசிறி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
காலம் காலமாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் இன்றி தவித்து வருகின்றோம். நீருக்காக மிக நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளதோடு அவ்வாறு செல்லும் போது யானைகளாலும் தாக்கப்படுகின்றோம்.
விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு கிணறு தான் உள்ளது. அதுவும் அதில் உவர் நீர்தான் உள்ளது. அதனை குடித்தால் சிறுநீரக பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற போதிலும் அதனை தான் குடித்து வருகிறோம்.
இவற்றை எல்லாம் அரசியல் தலைவர்கள் காலம் காலமாக பார்த்துக் கொண்டு தான் உள்ளார்களே தவிர எமது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை இதுவரை பெற்றுத் தரவில்லை.
உன்னிச்சை குடிநீர் திட்டம் மாவட்டத்தில் எங்கெல்லாமோ செல்கிறது ஆனால் எமக்கு கிடைக்கவில்லை. எனவே அதையாவது எமக்கு பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |