ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் பார்த்து உடன் நடவடிக்கை எடுத்த தவிசாளர்
பாரிய மழைவெள்ளம் ஏற்படும் காலங்களில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பாலத்தினூடாக வெள்ளநீர் வெகு விரைவாக கடலைச் சென்றடைவது வழக்கம்.
இந்நிலையில் குறித்த பாலத்தின் கீழ் அமையப் பெற்றுள்ள குழாய்கள் கழிவுகளால் அடைக்கப்பட்டுள்ளதையும், வருகின்ற வடகீழ் பருவப் பெயற்சி காலத்தில் பெய்யும் மழை வெள்ளத்திற்கு முன்னர் இவ்வாறு சகதியைப் கொண்டு அடைபட்டுள்ள பாலத்தை துப்பரவு செய்து வெள்ளநீர் இலகுவாக கடலைச் சென்றடைவதற்கு ஏதுவான வசதிகளை சம்மந்தப்பட்டவர்கள் உடன் செய்து முடிக்க வேண்டும், என ஊடகவியலாளர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்னனர் இவ்விடயத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்திருந்தனர்.
நீர் வழிந்தோடுவதில் சிக்கல்
அச்செய்திகளை அவதானித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் திங்கட்கிழமை (21.07.205) குறித்த பாலத்தில் அடைப்பட்டிருந்த குப்பை கூழங்களையும், நீர் வழிந்தோடுவதற்குத் தடையாக இருந்த பற்றைகளையும் அவதானித்து அதனை உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் திங்கட்கிழமை பிரதேச மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இயந்திரங்களையும், உழியர்களையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உழியர்களையும் கொண்டு மிக நீண்டகாலமாக பாலத்தில் அடைபட்டிருந்த குப்பைகள், கழிவுகள், மற்றும் பற்றைகளும், அகற்றப்பட்டன.
”பெரியகல்லாறு பாலத்தின்கீழ் வடிச்சல் குழாய்கள் குப்பைகளால் அடைக்கப்பட்டுருந்தாக செய்திகள் வெளிவந்திருந்ததை நான் ஊடகங்களில் பார்த்ததேன். அவ்வாறு செய்தி வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் இன்றயத்தினம் அவற்றைத் துப்பரவு செய்துள்ளோம்.
இனிமேல் வெள்ளநீர் இலகுவாக கடலைச் சென்றடையும், இவ்விடயத்தை வெளிக் கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எனது நன்றிகள்" என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
