மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு(Photos)
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம்(03.08.2023) மட்டக்களப்பு மாநகரசபையினால் நுளம்பு பெருகும் இடங்கள் ஏற்படா வண்ணம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரமதான பணி
தற்போது நாட்டில் நிலவும் டெங்கின் தாக்கம் அதிகமான நிலையில் காணப்படுவதன் காரணமாக ஆலய வளாகத்தில் நுளம்பு பெருகும் இடங்கள் ஏற்படா வண்ணம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் ஆலய சூழலை பேணும் வகையில் தமது கழிவுகளை அகற்றுமாறு இங்கு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜாவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
