மட்டக்களப்பு, யாழின் சில வீதிகளில் எழுதப்பட்டுள்ள “மாவீரர் நாள் நவம்பர் 27” என்ற வாசகம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பல்வேறு செயற்பாடுகளில் மக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சில வீதிகளில் “மாவீரர் நாள் நவம்பர் 27” என எழுதப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வீதிகளில் மாவீரர் நாள் 27 என எழுதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சந்திவெளி பகுதியில் உள்ள வீதிகளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் நவம்பர் 27 என எழுதப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும், கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக "மாவீரர் நாள் நவம்பர் -27" என எழுதப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam