மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பிலவ வருஷ விசேட பூஜை வழிபாடு
மலர்ந்திருக்கின்ற “பிலவ” எனும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு - களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடும், உள் வீதி திருவிழாவும் இடம்பெற்றுள்ளது.
புதுவருட தினமான இன்று புதன்கிழமை (14) காலை இவ் பூயை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
மூல மூர்த்தியாகிய சுயம்புலிங்க பிள்ளையாருக்குப் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிள்ளையார், முருகன் வள்ளி சமேதராய், சிவன் பார்வதி சமேதராய் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து உள்வீதி திருவிழா நடைபெற்றது.
இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய பிரதம குருவால் கைவிசேடம் வழங்கப்பட்டது.
கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள்
தலைமையில் நடைபெற்றது.







மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam