பயணத்தடையை தொடர்ந்து வெறிச்சோடி காணப்படும் மட்டக்களப்பு நகரம்
மட்டக்களப்பு மாவட்டம் பயணத்தடை காரணமாக மீண்டும் முடங்கியுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரம் வெறிச்சோடி காணப்படுவதைக் காணமுடிகின்றது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பயணத்தடை முற்றாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், பயணத்தடையினை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 150க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் தினமும் அடையாளப்படுத்தப்படுவதன் காரணமாக மாவட்டத்தின் நிலை ஆபத்தில் உள்ளதாகச் சுகாதாரத் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பேணி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும் மட்டக்களப்பின் சில பகுதிகள் பயணக்கட்டுப்பாடுகளையும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களையும் மீறி சிலர் செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam