மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் மகளீர் தின நிகழ்வு
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் ஆலோசனை, மற்றும் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் மேனகா புவிக்குமார் அவர்களின் நெறிபடுத்தில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நேற்று (27.03.2024) நடைபெற்றுள்ளன.
மகளீர் தின நிகழ்வு
இதன்போது பட்டிபளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நான்கு திணைக்கள மகளீர் உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றிய எல்லே விளையாட்டு நிகழ்வு, உள்ளூர் கைப்பணி உற்பத்தி பொருட்களுக்கள் கண்காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் விளையாட்டுப் போட்டியில் பட்டிபளை பிரதேச செயலக மகளீர் அணி முதலாவது இடத்தையும், பிரதேச சபை மகளீர் அணி இரண்டாவது இடத்திதையும் பெற்று கொண்டதுடன் திறமைகளை வெள்ளிக்காட்டிய மகளிருக்கு இதன்போது பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை வைத்தியர், மூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.