மட்டக்களப்பில் மீண்டும் மழை! குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது மீண்டும் அவ்வப்போது மழைபெய்து வருகின்ற நிலையில் மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், நவகிரிக்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி உயரத்தில் சனிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாகவும், தற்போது அக்குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 கொள்ளளவில் உள்ளதாகவும், நவகிரிக்குளத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் முருகேசு பத்மதாஸன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாழ் நிலப்பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புப் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சனிக்கிழமை காலை 8.30 மணி வரையில் 3.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், 11.30 மணி வரைக்கும் 4.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.





போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam