மட்டு. ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் களவிஜயம்
மட்டக்களப்பு - கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த களவிஜயமானது, நேற்று (18.07.2025) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்போது அவர் ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலையால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள், மற்றும் ஏனைய மருத்துவ சேவைகள், வைத்தியசாலையின் தற்போதைய நிலவரங்கள், இதுவரையில் எத்தனை சத்திர சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன போன்றவற்றை கேட்டறிந்து கொண்டார்.
முக்கிய விடயங்கள்
குறித்த களவிஜயத்தில், அங்குள்ள வைத்தியவர்கள், உத்தியோகஸ்த்தர்களிடம், கலந்துரயாடி விருந்தினர் பதிவேட்டிலும் கையொப்பம் இட்டார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து வரும் நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் தொடர்பிலும், இதுவரையில் இந்த வைத்தியசாலையில் 3000 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலை நிர்வாகம் இதன்போது அமைச்சரிடம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













