மட்டக்களப்பில் தொடரும் கன மழை: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை (Video)
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ளம் வழிந்தோடாத நிலை காணப்படுகின்றது.
எனினும் இன்று (30.12.2023) மழை சற்று ஓய்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று வரை பெய்த மழை காரணமாக வெள்ள நீர் கிராமப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.
இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை
ஆனால், பெரிய கல்லாறு ஆற்றுவாய் வெட்டி விடப்படும் பட்சத்தில் மிக விரைவாக வெள்ள நீர் வழிந்தோடுவதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளதாக அப்பகுதி மக்களும் மீனவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிணங்க இராஜாங்க அமைச்சர் நீர்ப்பாசனப் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினம் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கமைவாக பெரியகல்லாறில் அமைந்துள்ள ஆற்றுவாய் கனரக இயந்திரத்தின் அகழப்பட்டு வெள்ள்ளநீர் கடலுக்கு அனுப்பும் செயற்பாட முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் நன்றி தெரிவிப்பு
குறித்த ஆற்றுவாய் வெட்டு இடத்திற்கு பூ.பிரசாந்தன், நீர்ப்பாசனப் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினம், நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர், பொதுமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் தமது கோரிக்கைக்கு இணங்க ஆற்றுவாய் வெட்டி, தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவற்கு நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் அப்பகுதி மக்கள் இதன்போது நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
