மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றதாகவும், இன்று இரண்டாம் நாளாகத் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாகவும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கோவிட்- 19 இரண்டாவது தடுப்பூசி சனிக்கிழமை(01) இரண்டாவது நாளாக இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபீர் தலைமையில் இந்த இரண்டாவது தடுப்பூசி போடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஒரு நாளில் 416 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள், ஊழியர்களுக்கு இந்த இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. இதன் முதலாவது தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri