எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government El Niño
By Kumar Aug 25, 2026 09:17 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(25.08.2026) இடம்பெற்றது.

விசேட தீர்மானங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது விசேடமாக எல் நினோ தாக்கம் குறித்தும் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Batticaloa Completely Affected By El Nino Impact

மேலும் பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான் பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை- சந்திவெளி மற்றும் நரிப்புல் தோட்டம்- பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின் நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Batticaloa Completely Affected By El Nino Impact

அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.நவநீதன், பிரதேச செயலாளர்கள், மூப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Batticaloa Completely Affected By El Nino Impact

எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Batticaloa Completely Affected By El Nino Impact

2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு

2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு

அநுரவை எப்படி அழைக்க வேண்டும்..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் ஹந்துனெத்தி

அநுரவை எப்படி அழைக்க வேண்டும்..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் ஹந்துனெத்தி


மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US