கொழும்பு - ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த ஐந்து மாத குழந்தை (Photos)
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் புணானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகப்பேற்று விடுமுறையில் நின்ற பெண் வைத்தியர் தனது குடும்பத்துடன் சிலாபத்தில் இருந்து காத்தான்குடி வைத்தியசாலைக்கு தனது கடமையினை பொறுப்பெடுப்பதற்காக பயணித்த வேலையிலயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சாரதியாக வந்த புத்தளம் வீதி சிலாபத்தை சேர்ந்த எம்.எச்.மர்சூக் (வயது80) என்பவரும் வைத்தியரின் ஐந்து மாதம் மதிக்கத்தக்க ஆண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு பேரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - ஓட்டமாவடி பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பலர் படுகாயம்
வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், கல்குடா டைவர்ஸ் மற்றும் அகீல் அவசர சேவைப்பிரிவினரும் களத்தில் உதவிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
MAY YOU LIKE THIS VIDEO