மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் 23 வயது இளைஞன் பலி
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் உயிரிழப்பு
கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் தொடருந்து தண்டவாளத்தில் உயிரிழந்த நார் இருந்த நிலையில் மட்டு தொடருந்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கடுகதி தொடருந்து மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri