கிழக்கு மாகாணத்திலும் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்
மட்டக்களப்பு
விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த போராட்டமானது கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசே உடன் உரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஒளி வேண்டும், மண்வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து, உரம் இன்றி உழவு இல்லை, உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதே ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சேலை, ஆயித்தியமலை, வந்தறுமூலை, கிரான் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ள கமநல கேந்திர நிலையங்களிற்கு முன்னாலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை
சேருநுவர பிரதேச விவசாயிகள் தங்களின் விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தினை பெற்றுத்தறுமாறு கோரி இன்று (18) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
சேருவிலவிலுள்ள அனைத்து விவசாயிகளும்,விவசாய சங்கங்களும் ஒன்றினைந்து இவ் கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
சேருநுவர சந்தியில் இவ்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்தும் தடைபட்டது.
ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு விவசாயம் மேற்கொள்ள
உரத்தினை பெற்றுத்தா,அராஜக அரசியல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை
ஏற்படுத்திக்கொடு போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு, கொடும்பாவிகளும் ஏரித்து
எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.





நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan