கோவிட் தொற்றை கட்டுப்படுத்த பொலிஸாரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் மக்களை பாதுகாக்க வெளியிட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றச் செய்யவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் முகக்கவசம் முறையாக அணியாதோர் மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ராஜபக்ஸ தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது முகக்கசவங்களை சரியான முறையில் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
