பட்டலந்த விவகாரம் : அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து பேசுவதற்கு தற்போது மிகவும் தாமதமாகி விட்டதாக, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் நீதிக்காக..
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், இரண்டு நாள் விவாதத்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அத்துடன், அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அனுப்ப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும். இதன் மூலம் மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
பட்டலந்த சம்பவம் குறித்து, முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க அனைத்தும் அறிந்தவர் என்றும், அல் ஜசீராவின் நேர்காணலில், அந்த பிரச்சினை எழுப்பப்படும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri