தப்பிக்க முடியாத இக்கட்டான நிலை ரணிலுக்கு! தீவிரமடையும் பட்டலந்த விவகாரம்
பட்டலந்த வதை முகாம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தப்பிக்கவே முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே(Nalin Hewage) தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலால் தப்ப முடியாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச பயங்கரவாதம் ஒன்று வரலாற்றுக் காலப்பகுதியில் இருந்தே காணப்பட்டு வந்தது.
வெள்ளை ஆடை அணிந்து மலர் தட்டை ஏந்தி வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தவறிழைத்தவர்களாகவே செயற்பட்டு வந்துள்ளனர். தற்போது அவர்களின் முகத்திரையெல்லாம் கிழிந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாமாகவே முன்வந்து அல் ஜசீரா நேர்காணலில் இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.
தற்போது அவருக்கு அதில் இருந்து விடுபட முடியாத நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
