படுகொலையாளி பசில்:நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு-செய்திகளின் தொகுப்பு
பொருளாதார படுகொலையாளியான பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் தோற்றம் பெறும் மக்கள் போராட்டம் பாரிய விளைவை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். பணவீக்கம் 70 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதால் பொருள் மற்றும் சேவை கட்டணம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் நடுத்தர மற்றும் தோட்ட புறங்களில் வாழும் மக்களின் சுகாதார போசாக்கு தன்மை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
நடுத்தர மக்களின் போசனை மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பாடசாலை மாணவர்களின் கல்வித்துறையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan