பசில் ராஜபக்ச டுபாய்க்கு திடீர் விஜயம்
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில் இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் டுபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிறுவனத்தின் கோல்ட் ரூட் ஸ்பெஷல் என்ட்ரியின் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து தனியாக பயணித்துள்ளார்.
அவருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜயநாத கெட்டகொட ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இந்தியாவிற்கு மத நிகழ்ச்சி
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக அவர் பெரும் பணியைச் செய்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ஒரு மத நிகழ்ச்சிக்காக விஜயம் செய்துள்ளார்.
இதனால் கோட்டாபய மற்றும் பசில் ஆகிய இருவரின் வாக்குகளையும் நாமல் ராஜபக்ச இழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளார்.
இன்று அதிகாலை (20) 3.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் புறப்பட்டுச்சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எந்தவொரு தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
பசில் ராஜபக்ச எந்த நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் பொதுவாக அமெரிக்காவிற்கு அடிக்கடி பயணம் செய்வதினை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் தேர்தல்களை வழிநடத்தி தோல்வியடையும் போது பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
