103 கோடி ரூபா மோசடி! பசில் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இலஞ்சம் ஊழல்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜாமினி கமன் துசார வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், 2025 .07.07ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 103 கோடி ரூபாவை மோசடி செய்ததாக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்.
ஊழல் மோசடிகள்
இது தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று (2025.11.04) வாக்கு மூலம் அளித்தேன்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் குழுவினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

2010 தொடக்கம் 2014 வரை உள்ளூர் போக்குவரத்துக்காக இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதற்காக மகநெகும நிதியில் 150 இலட்சம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள 14 வாகனங்களை பாவித்து 600 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு பிரபுக்கள் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் 64 பேரும் இராணுவத்தில் 84 பேரும் பயன்படுத்தியதற்காக 200 இலட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சீக்கிரம் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan