பசில் ராஜபக்ச கோவிட் குழுவின் தலைவர் அல்ல - பிரசன்ன ரணதுங்க
பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்தாலும் அவரின்றி அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு அவர் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொறுப்புகள் அனைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா - வத்துப்பிட்டிவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச சார்பில் ஜனாதிபதியோ கட்சியோ அந்த பொறுப்பின் பகுதியை சரியான நிறைவேற்றும். சமூக வலைத்தளங்களில் பசில் ராஜபக்சவை கோவிட் குழுவின் தலைவராக குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறான பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர் வரவில்லை. திரைக்கு பின்னால் இருந்தவாறு பசில் ராஜபக்ச கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்காக பாரிய வேலைகளை செய்துள்ளார்.
அவர் சிறப்பாக வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து வந்துள்ள நிலைமயில், சமூக ஊடகங்களில் கூறப்படுவது போல் அவர் நாட்டை விட்டு செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
பசில் ராஜபக்ச ஒருங்கிணைப்பு செய்யும் பலத்திற்கு சவால் விடக் கூடியவர்கள் எவரும் இல்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ச போன்ற நபர் நாட்டுக்கு அவசியம்.
தனிப்பட்ட தேவைக்காக அவர் குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
