எங்கள் குடும்பத்தில் யாருமே தலைமறைவாகி இருக்கவில்லை! நாமல் பகிரங்கம்
எங்கள் குடும்பத்தில் யாருமே சட்டத்தை மதிக்காமல் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருக்கவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(29.5.2026) ஊடகவியலாளர் ஒருவர் பசில் ராஜபக்ச ஏன் நாட்டிற்கு வருகை தராமல் தலைமறைவாகி இருக்கின்றார் என நாமலைப் பார்த்து கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் முன்னிலையாகி கருத்துக்களை முன்வைக்கின்றனர்.எமது குடும்பத்தினர் சட்டத்தை மீறி செயற்படவில்லை எனவும் கூறினார்.
அத்தோடு, தற்போது ஆட்சியில் உள்ள சில முக்கியஸ்தர்கள் பசிலுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் மூலம் பசில் நாட்டிற்கு வருகை தராமல் இருக்கின்றாரோ தெரியவில்லை எனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கம் மே மாதம் ஆரம்பித்தால் ராஜபக்ச குடும்பத்தில் யாரையாவது விசாரணைக்கு அழைத்து விடுவார்கள் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்