அமெரிக்காவில் மோசமாகியுள்ள பசிலின் உடல்நிலை: வெளியான அவசர அறிவிப்பு
மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவர் மன்றில் முன்னிலையாகாதற்கான காரணத்தை வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளார்.
பசில் ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாமை காரணமாக அவரை நாட்டிற்கு விமானத்தில் அனுப்ப முடியாது என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் சான்றிதழ் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளனர்.

பிடியாணை உத்தரவு
அதன்படி, ராஜபக்ச தனது நோயிலிருந்து மீண்ட பிறகு நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
அவரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை மே 22 ஆம் திகதி வரை பிடியாணை உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.