பசில் வந்து விட்டார் இனி பிரச்சினைகள் தீர்ந்து விடும்! - நிமல் லங்சா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பியுள்ளதன் காரணமாக மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இன்று காலை இலங்கை திரும்பிய பசில் ராஜபக்சவை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த அவர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கும் நேரதத்தில் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கை திரும்பியுள்ள பசில் ராஜபக்ச, சுகாதார ஆலோசனைகளின் படி சில தினங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார் என கூறப்படுகிறது.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam