மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பசில்!
2015 ஆம் ஆண்டு ‘திவிநெகும’ நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கில் இருந்து அவரை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
திவிநெகும திணைக்களத்தின் திவிநெகும சமூக அடிப்படையிலான வங்கியின் நிதியில் இருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்கு நட்டஈடு மற்றும் கருணைத்தொகையை வழங்கியதாக அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிய திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் பல நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களில் இருந்து பசில் ராஜபக்ச இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த தேர்தல் கால முறைகேட்டு வழக்குகளில் இருந்தும் பசில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த மாதத்தில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மருத்துவர் மற்றும் ஏனைய இருவரையும் எதிர்வரும்14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



